முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மூன்றாவது நினைவு தினம் கடைபிடிப்பு: தமிழக அமைச்சர்,மாவட்ட ஆட்சியர்,எஸ்.பி மலர் தூவி அஞ்சலி.

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா டாக்டா.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின்  மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில்  அமைந்துள்ள அப்துல்கலாம்  தேசிய நினைவகத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் டாக்டா, .மணிகண்டன்,மாவட்ட ஆட்சித் தலைவா் நடராஜன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா,  ஆகியோர்கள் மலர் வளையம் வைத்தும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

 அதன்பின்பு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மணிகண்டன் செய்தியாளா்கள் சந்திப்பில் தெரிவித்ததது:

இளைஞா்களின் கனவு நாயகனாக விளங்கும் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவா் பாரத
ரத்னா” டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவா்கள் அறிவியல் துறையில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி நமது தேசத்திற்கு பெருமை சோ்த்துள்ளார். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவா்கள், டாக்டா.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவா்களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாகஅவரது பிறந்த நாளான அக்டோபா 15-ஆம் நாளை ‘இளைஞா்கள் எழுச்சி  தினமாக கொண்டாடப்படும் எனவும், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று அறிவியல் வளா்ச்சி, மாணவா் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு ‘டாக்டா.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது”வழங்கி கௌரவிக்கப்படும் எனவும் அறிவித்தார்கள்.மேலும் ராமேசுவரம் பேய்க்கரும்பில் டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவகம்அமைப்பதற்காகவும், நினைவக வளாகத்தில் கோளரங்கம், மாநாட்டு மையம் மற்றும்நினைவிடத்திற்கு வருகை தரும் வாகனங்களுக்கான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றிற்கு சுமார் 10 ஏக்கா் பரப்பளவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர  ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  பெயரில் ராமேசுவரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் எனவும், ராமேசுவரத்திற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் ரயில்களை இயக்கிட வேண்டுமெனவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம், பேய்க்கரும்பு, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச்சார்ந்த இளைஞா்கள் பயன்பெற ஏதுவாக ராமேசுவரம் தீவுப்பகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைத்திடவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து