முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீன் விற்கும் மாணவியை ஊடகங்களில் விமர்சித்தவர் கைது

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

எர்ணாகுளம்: கேரளாவில் கல்லூரியில் படித்துக் கொண்டே பொருளாதார சூழலுக்காக மீன் விற்பனை செய்யும் மாணவி ஹனன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சித்து வெறுப்பு பிரச்சாரம் செய்த புகாரில் வயநாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாலை நேரங்களில் மீன் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம், வறுமையில் உள்ள தனது குடும்பத்திற்கு பொருளாதார உதவிகளை செய்து வருகிறார்.

ஹனன் குறித்து அண்மையில் கேரளாவில் பத்திரிக்கைகளில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் ஹனனின் நடவடிக்கையைப் புகழ்ந்து உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், ஹனனின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் அவரது நடவடிக்கை போலியானது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.
ஹனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்தார். மேலும் ஹனன் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஹனன் குறித்து சமூகவலைதளங்களில் மோசமான விமர்சித்தது தொடர்பாக வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹனன் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் வீடியோ பதிவை வெளியிட்டதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹனன் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து