முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 வயதுக்கு உட்பட்டோருக்கு வருமான வரி ரத்து? தேர்தல் அறிக்கையில் சேர்க்க காங்கிரஸ் திட்டம்

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை கவர 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியை ரத்து செய்யும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி தரப்பில் இப்போதே தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளைக் கவர 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியை ரத்து செய்யும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து