முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது பா.ஜ.க. மீது மெகபூபா கடும் தாக்கு

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தியது ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போன்றது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. பின்னர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

இந்த நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன நாள் தின கொண்டாட்டத்தையொட்டி நடந்த நிகழச்சியில் கலந்து கொண்டு மெகபூபா முப்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காஷ்மீரில் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதையடுத்தே பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன் வந்தது. இருப்பினும் அது மிக மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தில் அமைதியை திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை.

ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது. பாகிஸ்தானுடனான நல்லுறவு, காஷ்மீருக்கு சிறப்பு பொருளாதார திட்டம் என நான் கேட்ட எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. திறந்த மனதுடன், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர் யோசனை தெரிவித்துள்ளார். அதை ஏற்று மத்திய அரசு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து