முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பலத்த மழை: கடந்த 48 மணிநேரத்தில் 37 பேர் பலி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதி

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 48 மணிநேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக ஆக்ராவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் முசாபர் நகர் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய ஊர்களில் தலா மூன்று பேர், மீரட் மற்றும் மெயின்புரி ஆகிய ஊர்களில் தலா 4 பேர், பரேய்லியில் இருவர், மற்றும் கான்பூர் ஊரக பகுதியிலும், மதுரா, காஸியாபாத், ஹப்பூர், ரேபரேலி, ஜலாவுன், ஜான்பூர், ப்ரடாப்கர், புலன்ஷார், பிரோஸாபாத் மற்றும் அமேதி ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் இந்த மழைக்கு உயிரிழந்துள்ளனர். இது தவிர, ஷரான்பூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் மழையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கான்பூர் ஊரகப் பகுதிகள், முஸாபர் நகர், லிலித்பூர் மற்றும் பிரதாப் நகர் பகுதிகளில் எண்ணற்ற மாடுகள் இறந்துள்ளன என்று மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆறுகளில் உடைப்பெடுத்து சமவெளிகளில் வெள்ளம் பாய்ந்ததால் மாநிலத்தின் பல முக்கியப் பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவு மழையினால் லக்னோ கடும் வெள்ளப் பாதிப்பில் தத்தளித்து வருகிறது.

நகரத்தின் பெரும்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் லக்னோ ஒரு தீவைப் போல காட்சியளிக்கிறது. நகரின் ஹரிராம்நகர், இந்திராநகர், கோமதி நகர், சப்ரூ மார்க், அலிகஞ்ச், சிதாபூர் ரோடு மற்றும் அமினாபாத் ஆகிய பகுதிகளில் மின்மாற்றிகள் வெடித்ததால் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து