முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தயாரிக்கப்படும் 343 கலவை மருந்துகளுக்கு தடை மத்திய அரசின் தொழில்நுட்ப குழு பரிந்துரை

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியாவில் உற்பத்தியாகும் 343 கலவை மருந்துகளை தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 349 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதில் சளி, இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மருந்துகள் தொடர்பான பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து