முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் பயங்கரம்: சுற்றுலா பஸ் மலையில் கவிழ்ந்த விபத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் 33 பேர் பலி

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : மகாராஷ்டிர மாநிலம் அம்பேனலி கட் மலைப் பகுதியில் 500 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

40 ஊழியர்கள்...

டாக்டர் பாலாசாஹேப் சவந்த் கொங்கன் கிரிஷி வித்யாபீத் வேளான் பல்கலையில் பணியாற்றும் 40 ஊழியர்கள் மஹாபலேஸ்வர் பகுதிக்கு நேற்று காலை சுற்றுலா சென்றுள்ளனர். ரெய்காட் மஹாபலேஷ்வர்-போலந்பூர் சாலையில் பேருந்து மலையிலிருந்து இறங்கியது. அப்போது அம்பெனாலி பகுதியில் பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. சுமார் 500 அடி ஆழத்தில் பேருந்து விழுந்து சுக்குநூறானது.

33 பேர் பலி...

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர். அதேபோல், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 33 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவேந்திர பட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து