முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் மதவாதத்தைத் தூண்டி பயனடைய பா.ஜ.க. முயற்சி: முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மாநிலத்தில் மதவாதத்தைத் தூண்டி பா.ஜ.க. பயனடைய முயற்சி மேற்கொண்டுள்ளது என முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு ஞானஜோதி அரங்கத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கண்டரே உள்ளிட்டோருக்கு நடைபெற்ற பாராட்டு விழா கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
 மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தது. ஆனால், பா.ஜ.க. செய்த அவப் பிரசாரத்தில் மக்கள் மயங்கி, காங்கிரஸை தோற்கடித்தனர்.

மதவாதக் கட்சியான பா.ஜ.க., மதவாதத்தை மக்களிடம் நோயைப் பரப்பும் வைரஸைப் போல பரப்பி வருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மதவாதத்தை அக்கட்சி தீவிரமாகப் பரப்பி வருகிறது.

உடுப்பி, தென் கன்னடம், வட கன்னட மாவட்டங்களை பா.ஜ.க. மதவாதத்தைப் பரப்புவதற்கான சோதனைக் கூடங்களாக மாற்றிக் கொண்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்துக்கு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். எந்தக் காரணத்துக்காகவும் மதவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து