முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் குமாரசாமியின் பேச்சால்தான் தனி மாநிலக் கோரிக்கை தலைதூக்கியுள்ளது: எடியூரப்பா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், முதல்வர் குமாரசாமியின் பேச்சால்தான் தனி மாநிலக் கோரிக்கை தலைதூக்கியுள்ளது என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ராம் நகரில் முதல்வர் குமாரசாமி அண்மையில் பேசும்போது,பெங்களூரில் கிடைக்கும் வருவாயில், வடகர்நாடகத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. இந்தப் பேச்சுதான் தனி மாநில கோரிக்கையை எழுப்பியுள்ளது. குமாரசாமியின் உள்நோக்கமும் அதுவாகத்தான் உள்ளது.

கர்நாடகத்தை இரண்டாக்கினால் தென் கர்நாடகத்தில் ம.ஜ.த.வை பலமாக்க முடியும் என்று குமாரசாமி நம்புகிறார். முன்னாள் பிரதமர் தேவெகெளடாவும் இதையே எதிர்ப்பார்க்கிறார். அகண்ட கர்நாடகத்தை அடைவதற்கு நமது முன்னோர்கள் பலர் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

வடகர்நாடக மக்களை பிரித்துபார்க்க முதல்வர் நினைப்பது வேடிக்கையாக உள்ளது.  விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய போராட்டத்தில் ஈடுபடும் வடகர்நாடக மக்கள், தேர்தலில் ம.ஜ.த.வுக்கு வாக்களிக்கவில்லை என்று முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.

தனி மாநிலக் கோரிக்கை குறித்து காங்கிரஸ் மெளனம் சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வீரசைவா, லிங்காயத்து பிரச்னையை தலைதூக்கியது.

முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தனிமாநிலக் கோரிக்கை எழுப்ப விதை தூவப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.

ஆனால் வட கர்நாடகம் குறித்து தவறான கருத்துகளை எதையும் கூறவில்லை என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வட கர்நாடகத்தை தனி மாநிலமாக்கும் கோரிக்கையை தேவையில்லாமல் முக்கியத்துவம் அளித்து, அதை பெரிதாக்கியது ஊடகங்கள்தான். இந்த விவகாரத்தில் கர்நாடக நலனுக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டுவருகின்றன. ஏதேனும் அசாம்பாவிதம் நிகழ்ந்தால், ஊடகங்கள்தான் பொறுப்பாக நேரிடும்.
வட கர்நாடகத்தைச் சேர்ந்த மக்கள், கர்நாடக அரசுடன் இணைந்துள்ளார்கள். வட கர்நாடகத்தை தனி மாநிலமாக்குமாறு யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் எந்தவித தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லைஎன்றார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து