முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா பரிசு வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

 ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா கடந்த 22.06.18 அன்று சிறப்பாக நடைபெற்றது.இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களுக்கு பெரிதும் சேவை புரிந்து வரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஊராணிபட்டித் தெருவை சேர்ந்த சிரியா வயது (24) என்ற பெண் இரண்டாவது பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.மருத்துவமனை டாக்டர்கள் ,செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரது சிறந்த கவணிப்பில் கர்ப்பிணி சிரியா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை தான் நகர்புற ஆராம்ப சுகாதார நிலையத்தின்  முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த குழந்தையை பாராட்டும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா கலந்து கொண்டு தாயையும், குழந்தையையும் வாழ்த்தி அரசு வழங்கிய அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கி சுகாதார நிலையத்தை சுற்றி பார்த்து அங்கு இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், நகராட்சி ஆணையாளர் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் சபரீஷ் பிரபு, மருத்துவ அலுவலர் கலா, சமுதாய நலச் செவிலியர் மாரியம்மாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மற்றும்மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து