முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் பதிவேடுகளை ஆணையாளர் அனீஷ் சேகர் திடீர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

 மதுரை , -மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில்  ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  ) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையம், கணினி பிரிவு, பொது பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, இயக்க பதிவேடு, விடுப்பு, அனுமதி விடுப்பு குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வருகைப் பதிவேட்டின்படி பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்கள் அலுவலக நிமித்தமாக வெளியில் சென்று வருவதை இயக்க பதிவேட்டில்  (ஆழஎநஅநவெ சுநபளைவநச) பதிந்து இயக்க பதிவேட்டினை முறையாக பராமரிக்குமாறு கூறினார். பதிவேடுகள் பராமரிப்பு அறையில் ஆய்வு செய்து முடிவுற்ற கோப்புக்களையும், தணிக்கை தடை முடிக்கப்பட்ட கோப்புகளையும் ஆய்வு செய்தார். அங்கு தேவையில்லாமல் உள்ள பொருட்களையும் உடைந்த தளவாட சாமான்களையும் அகற்றுமாறு கூறினார். குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள மனுக்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கட்டிட வரைபட அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ள மனுக்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பதிவேடுகளை முறையாக கணினியில் பதிந்து பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார். பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவு செய்வதை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.1 அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும், வார்டு எண்.17 எல்லீஸ் நகரில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் அம்ரூட் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவினையும் வார்டு எண்.21 எஸ்.பி.ஓ.காலனி 1 வது தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும் ஆய்வு செய்தார். போக்குவரத்திற்;கு இடையூறாக சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டிய கட்டிட உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் .ப.மணிவணணன்,  உதவி ஆணையாளர் .அரசு, மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) .சுப்பிரமணி, சுகாதார அலுவலர்  .விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து