முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன் விற்ற மாணவிக்கு சினிமாவில் வாய்ப்பு

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

எர்ணாகுளம் : கேரளாவில் குடும்ப வறுமை காரணமாக மீன் விற்று படிப்பை தொடரும் மாணவி ஹனனுக்கு சினிமா வாய்ப்பு கிட்டியுள்ளது.

எர்ணாகுளம் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. படித்து வருகிறார் ஹமித் ஹனன். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய படிப்பு தேவைக்காக காலையிலும் மாலையில் கல்லூரிக்கு நேரத்திற்கு முன்னும் பின்னும் மீன் விற்கிறார். இவரை குறித்து மலையாள நாளிதழான மாத்ரூபூமி கட்டுரை வெளியிட்டது.

கேரளா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரது பேட்டி கட்டுரையை படித்து பாராட்டி தள்ளினார்கள். கேரளா மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவர் பிரபலமானார். ஆனால் சிலர் சமூக வலைத்தளங்களில் அவரை கிண்டல் செய்தனர். இதில் இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டனர்.

இதையடுத்து மனமுடைந்த ஹனன், சமூக வலைதளத்தில் தன்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அம்மாநில முதல்வர், பினராய் விஜயன் அவரை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். மேலும் இயக்குனர் அருண் கோபி, மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு அளிக்க இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து