முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவை கண்டித்து டெல்லி மேல் சபையில் கடும் அமளி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அசாம் மாநிலத்தில் தேசிய மக்கள் குடியுரிமை பதிவு வெளியிட்டதன் மூலம் சுமார் 40 லட்சம் பேரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மேல்சபையில் பேசிய போது, அவரை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கடும் கூச்சல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்றும் மேல்சபையில் அதே நிலை நீடித்தது. நேற்று பகல் 11 மணிக்கு சபை கூடியதும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எம்.பி.க்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே சபையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலில் ஈடுபட்டனர். அது போல் இன்று(நேற்று)நடக்காமல் சபையை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெங்கையா நாயுடுவின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. சபை கூடியதும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

ராஜிவ்காந்தியை குறிப்பிட்டு அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எம்.பி.க்கள் அனைவரும் ஒரே சமயத்தில் குரல் எழுப்பினர். இதனால் சபையில் அமளி நிலவியது. இதற்கிடையே தெலுங்குதேச எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அவர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி வெங்கையா நாயுடு விடுத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை. சபை முழுவதும் கடுமையான கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதையடுத்து சபையை 12.30 மணி வரை வெங்கையா நாயுடு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து