முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டினால் மட்டுமே பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு - இந்தியா திட்டவட்டம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டினால் மட்டுமே, பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டவும், பயங்கரவாத முகாம்கள், உள்கட்டமைப்புகளை அழிக்கவும் அந்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

பாகிஸ்தானுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். அதேநேரத்தில், பயங்கரவாதம், மோதல், வன்முறை ஆகியவை இல்லாத சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை இந்தியாவால் நடத்த முடியும். இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் பொறுப்பு என்று அந்தப் பதிலில் வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து