முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள காதி வாரிய விளம்பர தூதராக மீன் விற்ற மாணவியை நியமிக்க திட்டம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் குடும்ப வறுமை காரணமாக ஓய்வு நேரத்தில் மீன் விற்று கல்லூரியில் படித்து வரும் மாணவி ஹனனை, மாநில காதி வாரியத்தின் விளம்பரத் தூதராக நியமிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண் ஹனன். இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஹனன் குறித்து மாத்ருபூமி நாளேட்டில் வெளியான கட்டுரையை அடுத்து பல்வேறு தரப்பினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் பினராய் விஜயனும் மாணவி ஹனனுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம் - பக்ரீத் காதி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் காதி வாரியத்தின் ஆடைகளை அணிந்து பேஷன் ஷோவில் பங்கேற்றார்.

அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் சிறிய நினைவுப் பரிசை வழங்கி, தொடர்ந்து துணிச்சலும் வாழ்க்கையில் எதிர்நீச்சலும் போட வேண்டும், முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து