முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி பிறவிப் போராளி நேரில் பார்த்த பினராய் பேட்டி

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : கருணாநிதி பிறவிப் போராளி. அவரின் மனோதிடம் வெற்றி பெற்றுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர்ந்து 7 -வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்களும் தொலைபேசி மூலமும், நேரிலும் ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் விசாரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பினராய் விஜயன், கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பிறவிப் போராளி.  கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து