முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் சீனக் கடலில் கூட்டு ராணுவப் பயிற்சி தெற்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், தென் சீனக் கடல் பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதிக்கான சர்வதேச நடைமுறை விதிகளை சீனாவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பும் (ஆசியான்) இணைந்து உருவாக்கி வருகின்றன. அதற்கான வரைவில், ஆசியான் நாடுகளுடன் இணைந்து தென் சீனக் கடல் பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையில் தனக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்காவின் செல்வாக்கை தென் கிழக்கு ஆசிய நாடுகளிடம் குறைப்பதற்காகவே சீனா இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுதவிர, சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அந்த வரைவில் வியட்நாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து