முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      அரசியல்
Image Unavailable

மதுரை, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று மாலை தேவகோட்டையில் துவங்குகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பேரவையின் மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சைக்கிள் பிரச்சார பேரணி மேற்கொள்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணியை மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் கடந்த 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அம்மா திடலில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணியாக புறப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மீண்டும் துவங்கிய இடமான அம்மா திடலை அடைந்து நிறைவு பெற்றது. இந்த சாதனை விளக்க சைக்கிள் பயணத்தின் போது தொகுதி வாரியாக நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு தலைமையேற்று சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சைக்கிள் பிரச்சார பேரணி செல்லும் வழியில் பல இடங்களில் குடிமராமத்து பணி, கோவில் குளங்கள் தூர்வாறும் பணியிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து 2-வது கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று 4 - ம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆயிரம் இளைஞர்களுடன் அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் துவங்குகிறது.  சைக்கிள் பேரணி துவக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து  கொள்கிறார்கள். அன்று இரவு பேரணியில் கலந்து கொள்ளும் ஆயிரம் இளைஞர்களும் தேவகோட்டையில் தங்குகிறார்கள்.

மறுநாள் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேவகோட்டையில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புறப்பட்டு கண்டதேவி, சண்முகநாதபுரம், ஆராவயல், அமராவதி புதூர், ரஸ்தா வழியாக காரைக்குடி நகரை நண்பகலில் சென்றடைகிறது. காரைக்குடி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிறது. இதில் சைக்கிள் பேரணியாக செல்லும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்கள். பின்னர் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சைக்கிள் பிரச்சார பேரணி திருப்பத்தூர் நகரை மாலையில் வந்தடைகிறது. அங்கு இரவில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவில் திருப்பத்தூரில் தங்குகிறார்கள். 

ஆகஸ்ட் 6 - ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி புறப்பட்டு திருக்கோஷ்டியூர், ஏரியூர் விளக்கு,மதகுபட்டி, ஓக்கூர், சோழபுரம், காஞ்சிரங்காள் வழியாக சிவகங்கை நகரை நண்பகலில் சென்றடைகிறது . அங்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் சைக்கிள் பயண இளைஞர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து அன்று மாலை சைக்கிள் பேரணி சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மானாமதுரை சிப்காட் வழியாக  மானாமதுரை பேரூராட்சியை வந்தடைகிறது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவிற்கு பின்னர் மானாமதுரையில் இருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பார்த்திபனூரை சென்றடைகிறது. அங்கு இரவில் சைக்கிள் பயண இளைஞர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து