முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்புகாடு அருகில் விவசாயிகள் வெண்டை சாகுபடி தீவிரம்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகமா லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி.

சொட்டுநீர் பாசனம் : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் , சின்ன குப்பம், சேர்ந்த நாடு, ஆண்டிக்குழி, நகர், ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் மேலாக விவசாயிகள் அதிகம் வெண்டை சாகுபடி தீவிரமாக செய்து வருகின்றனர். இவர்கள் தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.

நாசம் செய்யும் விலங்குகள் :  விவசாய நிலத்தை சுற்றி காப்புக்காடு உள்ளதால் காடுகளில் மான், பன்றி, குரங்கு, உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. காப்புகாடு சுற்றியும் வனத்துறையினர் முள்வேலி அமைத்து விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும். ஒரு கிலோ வெண்டைக்காய் ரூபாய் 12க்கு நிலத்திலேயே வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக விவசாயி தெரிவித்தார். இந்தப் பகுதி நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயத்தில் முற்றிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து