முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘காற்றின் மொழி’ அப்டேட்: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியுள்ள ஜோதிகா

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காற்றின் மொழி’ படத்துக்காக ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஜோதிகா.

சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பல்வேறு தரப்பினரும் தங்களுடைய குழுவினரோடு இப்பாடலுக்கு நடனமாடிச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்கள்.தற்போது இப்பாடலின் உரிமையைப் பெற்று, ‘காற்றின் மொழி’ படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.‘மொழி’ படத்துக்குப் பிறகு ராதாமோகன் - ஜோதிகா இணை மீண்டும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறது.

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் ரீமேக் தான் ‘காற்றின் மொழி’ என்பது குறிப்பிடத்தக்கது.விதார்த் , லட்சுமி மஞ்சு ஆகியோர் ஜோதிகாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்பு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ட்ரெய்லர் செப்டம்பர் மாதத்திலும், அக்டோபர் 18-ம் தேதி வெளியீடாக ‘காற்றின் மொழி’ திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்திருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து