முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷியா மசூதிகளில் தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 29 பேர் பலி

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் பர்தா அணிந்து வந்த பயங்கரவாதிகள் ஷியா மசூதிகள் மீது நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 29 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கார்டெஸ் நகரத்தின் கவஜா ஹாஸன் பகுதிகளில் உள்ள இரண்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனால், ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பர்தா உடைகளில் வந்த பயங்கரவாதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர்.

இதில், 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சிறுவர்கள் உள்பட 81 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து