முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்பின் மகன்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் போலீஸார் நாடியுள்ளனர்.
லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதில் ஒரு வழக்கில் நவாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இருவரும் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதர வழக்குகளில் நவாஸின் மகன்கள் ஹாசன், ஹூசேன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டனில் முகாமிட்டுள்ள இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.

ஹாசனையும் ஹூசேனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் போலீசார் நாடியுள்ளனர். இன்டர்போலிடம் இதற்கான மனு அளிக்கப்பட்டுள்ளது.

நவாஸின் மகன்கள் விரைவில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று பாகிஸ்தான் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து