முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரேஷன் கடைகள் இன்று வழக்கம்போல் செயல்படும். அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம், பணிவரன்முறை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். தி.மு.க.வின் தொழிற்சங்க முன்னேற்றக்கழகம் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட ஐந்து தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளனர்,.

இந்நிலையில் இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் , தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்,

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க தலைமை நிலைய செயலாளர் பால்பாண்டியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ் நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் 6.8.2018 அன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்காது. நியாயவிலைக் கடை பணியாளர்களின் 30 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த பத்தாண்டுகளாக கணக்கற்ற போராட்டங்களை தொய்வின்றி தொடர்ந்து நடத்தி வருகிறது. சென்னையில் கோட்டை நோக்கி கோரிக்கை பேரணியை பெருந்திரளாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இதனால் பல கோரிக்கைகள் பதிவாளர் மூலம் பரிந்துரைசெய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இன்று சில சங்கங்கள் நடத்த உத்தேசித்துள்ள போராட்டத்தில் தமிழ் நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் பங்கேற்காது. அனைத்து நியாயவிலைக் கடைகளும் இன்று வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து