முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த், கமலுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

நடிகர் ரஜினிகாந்த் பல விஷயங்களில் அ.தி.மு.க. கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் 8 வழிச்சாலை திட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆகவேதான் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.

ஆனால் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை, ஏனெனில் இவர்களுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை. பல வி‌ஷயங்களில் கமல் ஹாசன் தி.மு.க. பக்கம் சாய்ந்து செயல்படுகிறார். அவர் கட்சி தொடங்கி விட்டார். கொடியையும் அறிமுகப்படுத்தி விட்டார். ஆனால், பல வி‌ஷயங்களில் ஒரு தெளிவான முடிவை சொல்ல முடியவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவர்கள் செயல்பட முடியாமல் அவர்கள் கட்சி பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்படும். கமல் ரஜினி இருவரும் சேர்ந்து 5 சதவீத ஓட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து