முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசுபடுதலை தடுக்க இத்தாலி இரட்டை கட்டிடத்தின் மாடியில் 20 ஆயிரம் மரங்கள் வளர்ப்பு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

மிலன் : காற்று மாசுபடுதலை தடுக்க இத்தாலியின் மிலன் நகரில் இரட்டை மாடி கட்டிடத்தில் 20 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

மிலன் நகரில் செங்குத்தாக இரட்டை கட்டிடங்கள் உள்ளன. இங்கு 100 வீடுகள் உள்ளன. இதன் பெயர் பாஸ்கோ வெர்டிகலே ஆகும். காற்று மாசுபடுதலை தடுக்க இந்த கட்டிடத்தை கட்டிய பொறியாளர்கள் பெரும் திட்டமிடலை செய்து கட்டிடங்களுக்குள் காட்டை வளர்க்கும்படி செய்துள்ளனர்.

அதன்படி இந்த அபார்ட்மென்ட்கள் 2014-ம் ஆண்டு கட்டப்பட்டவை. இங்கு 800-க்கும் மேற்பட்ட மரங்களும், 4,500 புதர்கள் போன்ற செடிகளும், 15,000 செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மரங்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றன. இந்த இரு டவர்களில் உள்ள 20,000 மரங்களும் ஆண்டுக்கு 44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன.

இவற்றால் வீடுகளும் குளிர்ச்சி அடைய கூடும். சிறிய தூசுகளை வடிகட்டும் தன்மையும் ஒலி மாசுவில் இருந்தும் நம்மை காக்கும். மேலும் காற்று மாசை தடுக்கும் சக்தி மரங்களுக்கு உண்டு. இந்த கட்டடத்தை கட்டியவர் லாரா கட்டி. இவர் அந்த கட்டிடத்தில் எந்த மாதிரியான மரங்கள் தாங்கக் கூடிய சக்தி கொண்டவை என்பது குறித்து 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்.மேலும் சில திட்டங்கள் இந்த செடிகளுக்கு முறையாக தண்ணீர் இடுவது உரம் இடுவது போன்ற பணிகளும் தினமும் நடைபெறுகிறது. இந்த கட்டிடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை எடுத்து பூமியில் நட்டால் அதற்கு 20,000 சதுர மீட்டர் இடங்கள் தேவைப்படும். அதாவது மூன்றரை பங்கு புட்பால் மைதானத்தின் அளவை போன்றதாகும். இதுபோன்ற வீடுகள் தைவானிலும் டொரன்டோவிலும் பகோடாவிலும் கட்டப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து