கார் பார்க்கிங் பகுதியில் தரையிறங்கிய விமானம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
aircraft land car park 2018 8 6

கலிபோர்னியா : கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றில், விமானம் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. மாலின் கார் பார்க்கிங் பகுதியில் விமானம் தரையிறங்கி உள்ளது.

கலிபோர்னியாவின் சான்டா அனா பகுதியில் உள்ள சவுத் கோஸ்ட் பிளாசா மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாலின் உள்ளே மக்கள் பொருட்கள் வாங்கி கொண்டிருக்குக்கும் போதே, விமானம் அங்கு கீழ் இருந்த கார் பார்க்கிங் பகுதியில் இறங்கியுள்ளது. வேகமாக மோதியதில் மாலின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகி விழுந்தது.

இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மாலில் இருந்த நபர்களுக்கு எதாவது காயம் ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 3 கார்கள் சேதம் அடைந்துள்ளது.

அந்த சிறிய விமானம் பறந்து செல்லும் போதே எதோ பிரச்சனை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அந்த மாலுக்கு அருகில் உள்ள, விமான நிலையம் ஒன்றில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். ஆனால் விமானம் தரையிறக்கப்படும் முன், மாலில் உள்ள பார்க்கிங் பகுதியில் மோதி இருக்கிறது. தற்போது இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து