முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துகளுக்கான தண்டனையை கடுமையாக்கும் புதிய சட்டம் - வங்க தேச அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா : வங்கதேசத்தில் விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையை கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சாலைப் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக இந்தச் சட்டம் இயற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக பேருந்துகள் ஒன்றையொன்று போட்டியிட்டு முந்திச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த வாரம் இதேபோல் மற்றொரு பேருந்துடன் போட்டியிட்டு தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையேரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒரு பெண் உள்பட இரு இளம் மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, பேருந்தை போட்டி போட்டு ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நாட்டில் அடிக்கடி நடந்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போகக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாக்காவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சாலை விதிச் சட்டம் 2018 என்ற சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3 ஆண்டு சிறைத் தண்டனை, 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சரவைச் செயலர் ஷபியுல் ஆலம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து