முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டம் - நடப்பாண்டிற்குள் தொடங்க நடவடிக்கை: கட்காரி உறுதி

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நடப்பு நிதியாண்டுக்குள் கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் நிதி கட்காரி பேசியதாவது:-

கென் - பெட்வா, கோதாவரி - காவிரி, நர்மதை - தபதி, டாமன் கங்கை -பிஞ்சால் உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இந்தத் திட்டங்களைத் தொடங்க மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதில் நர்மதை - தபதி, டாமன் கங்கை - பிஞ்சால் திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கான ஒப் பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும். இந்த திட்டத்துக்காக உலக வங்கியிடமும், ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் ரூ.2 லட்சம் கோடி நிதியைப் பெறுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

கோதாவரியில் வரும் உபரி நீரை, கிருஷ்ணாவுடன் இணைத்து, கிருஷ்ணா நீரை பெண்ணாற்றுடன் இணைத்து, பெண்ணாறு நீரை காவிரியுடன் இணைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து