முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.சி.பி.சி. அந்தஸ்து மசோதா, பா.ஜ.க. அரசின் கண் துடைப்பு நாடகம்: மாயாவதி

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேறியது. மக்களவையில் கடந்த 2-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, தற்போது மாநிலங்களவையிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வித் துறையிலும் தலித் மக்களுக்கு போதுமான அளவு இடஒதுக்கீடு கிடைப்பதில்லை. இதனால் தலித் சமூக மக்களுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சில மாநிலங்கள் மட்டுமல்லாது, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நெருங்கி வரும் வேளையில், இவைகளில் வெற்றி பெற பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பு மற்றும் என்.சி.பி.சி. ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கண் துடைப்பு நாடகம். உயர் சமூகத்தில் உள்ள ஏழைகளும், முஸ்லிம் போன்ற சிறுபான்மையினருக்கும் 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து