முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மறைவு: பினராய் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலில் கலைஞர் ஒரு முதுபெரும் தலைவர். அரசியலில் மட்டுமின்றி பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்தவர். தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து