முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை - அதிபர் டிரம்ப் அதிரடி

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஈரான் மீது கடும் நெருக்கடி கொடுப்பதே இலக்கு என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு செறிவூட்டல் பணிகளை ஈரான் கைவிட்டால், அதற்கு சலுகைகளை அமெரிக்கா அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கடந்த மே மாதத்தில் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன்படி, வாகனம், தங்கம் மற்றும் அணிகலன்கள் மீது பொருளாதாரத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோலியம் உள்ளிட்டவற்றின் மீது நவம்பர் மாதத்தில் தடை விதிக்கப்படுகிறது. ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுப்பதே இலக்கு என்றும், ஈரான் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து