ஈரான் மீதான தடையை மீறும் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      உலகம்
USA-Iran 2018 8 8

வாஷிங்டன் : ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறும் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்து விட்டது. ஈரான் மீது நவம்பர் மாதம் அமலுக்கு வரவிருக்கும் பொருளாதாரத் தடைகள், இதைவிட மோசமாக இருக்கும். இந்தத் தடைகளை மீறி, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும், அமெரிக்காவுடன் வர்த்தம் செய்ய முடியாது.

என்னைப் பொருத்தவரை உலக அமைதியே முக்கியம். வேறு எதுவும் அல்ல என்று அந்தப் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்க பொருளாதாரத் தடையை அலட்சியம் செய்தாலும்கூட, அந்தத் தடை ஈரானின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து