முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி கூட்டுப் படையில் இணைய பாக். முன்னாள் ராணுவ தளபதி ஒப்புதல் பெறவில்லை

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையில் இணைவதற்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற ரஹீல் ஷெரீப், சவூதி அரேபியா தலைமையிலான 41 முஸ்லிம் நாடுகளின் கூட்டுப் படைக்கு தலைமை தாங்கினார்.

இதற்காக, அவர் பாகிஸ்தானிலிருந்து சவூதி தலைநகர் ரியாத் சென்றார்.

அதுபோலவே, பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஷுஜா பாஷா, ஐக்கிய அரபு அமீர நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், இரண்டு ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் எந்தப் பொறுப்பையும் ஏற்பதற்கு அந்த நாட்டுச் சட்டம் தடை விதிக்கிறது.

எனினும், தடையை பொருள்படுத்தாமல் ரஹீல் ஷெரீபும், ஷுஜா பாஷாவும் வெளிநாட்டுப் பொறுப்புகளை ஏற்றுள்ளது குறித்து விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெளிநாடுகளில் பொறுப்புகளை ஏற்க விரும்பும் அதிகாரிகள், மத்திய அரசின் ஆட்சேபணையில்லா சான்றிதழைப் பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இந்தச் சான்றிதழுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சவூதி கூட்டணியில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் இணைவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆட்சேபணையில்லா சான்றிதழை அளித்தது. ராணுவ தலைமையகமும் இதனை ஏற்றது. எனினும், அந்தச் சான்றிதழுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து