கலைஞர் மறைவு: துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
M-Karunanidh 2018 8 7

துபாய் : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈமான் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவர் திகழ்ந்த கலைஞரின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும். தமிழக மக்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களும் மிகவும் துயரத்தில் உள்ளனர். கலைஞர் அவர்களது இழப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் இழப்பாகும். அள்ளும், பகலும் அயராது உழைத்த உதய சூரியன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது. கலைஞர் அவர்கள் மறைந்த இந்த துயர நிகழ்வால் துபாய் ஈமான் அமைப்பும் பங்கு கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து