முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடலுக்கு முதல்வர் எடப்பாடி மரியாதை: மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லம் மற்றும் சி.ஐ.டி. காலனியில் உள்ள வீடு ஆகியவற்றில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு சென்று வைக்கப்பட்டது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் முதல்வரும் , தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ராஜாஜி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து