முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளால் நாட்டில் உணவுப் பொருள்களின் விலை குறைந்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் உணவுப் பொருள்களின் விலை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது தொடர்பாக கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

இப்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு நாட்டில் உணவுப் பொருள்களின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நுகர்பொருள் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக இருந்தது. மத்திய அரசின் சிறப்பான பொருளாதாரக் கொள்கையும், அத்தியாவசியப் பொருள்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும்தான் இதற்கு காரணம்.

பொதுமக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரித்தால், அது எந்த அளவுக்கு மக்களை பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் எடுத்து செயல்படுகிறது. உற்பத்தி குறைவு, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் சில பொருள்களின் விலை உயர்ந்தது. அப்போது, மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து நிலைமையை சரி செய்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து