சமூக நீதிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி - பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
modi twit karunanidhi 2018 8 8

சென்னை : மறைந்த  தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து தமிழில் டுவிட் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் புது டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வந்தார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில், தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து