கருணாநிதி மறைவுக்கு விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல்

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல் செய்தியை விடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை 7-ஆம் முதல் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி அறிந்தவுடன் விஜயகாந்த் டிவிட்டரில் இரங்கலை தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு விடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். இதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்தும் விடியோ மூலம் இரங்கல் செய்தியை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments