கருணாநிதியின் உடலுக்கு அஜித், சூர்யா அஞ்சலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      சினிமா
ajith tribute 2018 8 8

சென்னை : ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு சிவக்குமார் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று  வைக்கப்பட்டிருந்தது.  கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா, நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், சரோஜா தேவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து