நிதித்துறை பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் ஜெட்லி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
arun jetley 2017 7 23 0

புது டெல்லி : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல் நலம் தேறியுள்ளதை அடுத்து, நிதி அமைச்சர் பொறுப்பை, மீண்டும் ஏற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 2014-ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.க. அரசு மத்தியில் பதவியேற்ற போது, நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார். கடந்த ஏப்ரலில், ஜெட்லிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெட்லி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதன்காரணமாக, ஜெட்லி கவனித்து வந்த நிதித்துறை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக, தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. தற்போது, ஜெட்லி, உடல்நலம் தேறி விட்டதால், மீண்டும் வழக்கம் போல் பணியை துவங்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அடுத்த சில வாரங்களில், ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து