கருப்பு பட்டியலில் ஷெரீப் மகன்கள் பெயர் சேர்ப்பு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
sherif son 2017 7 4


இஸ்லாமாபாத்: கருப்பு பட்டியலில் ஷெரீப்  மகன்கள் பெயர் சேர்ப்பு
                                     கடவுச்சீட்டுகளும் முடக்கியதாக தகவல்
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகிய இருவரின் பெயர்களை அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது. மேலும், அவர்களின் கடவுச் சீட்டு முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பனாமா முறைகேடு வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீப், மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பனாமா முறைகேடு தொடர்பான 3 வழக்குகளில் நவாஸ் ஷெரீபுடன் அவரது மகன்கள் ஹசன், ஹூசன் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர். அவர்கள், ஒரு வழக்கு விசாரணைக்கு கூட நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கப்பட்டனர்.


இந்நிலையில், அவர்களின் பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்க்குமாறு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அவர்களின் கடவுச்சீட்டுகளை முடக்க வேண்டும் என்று கடவுச்சீட்டு வழங்கும் இயக்குநரகத்துக்கு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் பிறகு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக, அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து