முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையின் அழுகையால் இறக்கி விடப்பட்ட இந்திய குடும்பம் பிரிட்டிஷ் விமான நிறுவனம் மீது புகார்

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable


புது டெல்லி:
3 வயது குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடந்த 23-ம் தேதி புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை விமானம் புறப்பட தொடங்கியதும் அழ ஆரம்பித்துள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் சக இந்திய பயணிகள் குழந்தைக்கு பிஸ்கட் உள்ளிட்டவற்றை கொடுத்து சமாளிக்க முயன்றனர்.


ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. மேலும் விமான ஊழியர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன குழந்தை அதிகமாக அழுதுள்ளான். இதையடுத்து மீண்டும் குழந்தையிடம் வந்த விமான ஊழியர், நீ அழுது கொண்டே இருந்தால் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி போட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இருந்தாலும் குழந்தையின் அழுகை ஓய்ந்தபாடில்லை. இதையடுத்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியது விமானம்.


சம்பந்தப்பட்ட மற்றும் பிஸ்கட்களை கொடுத்த மற்றொரு இந்திய குடும்பத்தின் போர்டிங் பாஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு குடும்பத்தினரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விமான ஊழியர்கள் இனவாத கருத்துக்களைப் பயன்படுத்தி, இந்தியர்களை பற்றி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயணிகளின் இது போன்ற குற்றச்சாட்டுக்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், எந்த விதமான பாகுபாட்டையும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் முழு விசாரணையை ஆரம்பித்துள்ளோம், வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம், என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து