காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ மேஜருக்கு மும்பையில் அஞ்சலி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
gowstup rane 2018 8 9

மும்பை:
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் கவுஸ்துப் ரானேவுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் ரானேவுக்கு மும்பையில் ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டம் குரேஸ் செக்டரில் கடந்த 4-ம் தேதியன்று தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் ரானே உயிரிழந்தார். மும்பையில் மிரா சாலையில் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்கள் இறுதி அஞ்சலியை மேஜர் ரானேவுக்கு செலுத்தினர்.


மேஜர் ரானேவின் உடல், ஷீட்டல் நகரிலுள்ள அவரது வீட்டிலிருந்து அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு பூக்கள் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின்போது அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அவரது நினைவுகளை போற்றும் விதமாக தேசபக்தி கோஷங்களை முழங்கிய வண்ணம் நடந்து சென்றனர். ஏராளமான ராணுவ உயரதிகாரிகள், பிரதாப் சர்னாய்க் மற்றும் ரஞ்சன் விசாரே உள்ளிட்ட அரசியல்வாதிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மேஜர் ரானேவின் இறுதிச் சடங்கில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து