ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கூடாது: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Green Tribunal Chennai 2018 08 09

சென்னை, ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி நேற்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில்,

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது. உள்ளே பராமரிப்பு பணிகளை நடத்தலாம். ஆனால் ஆலையை இயக்க கூடாது. உள்ளே முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து