முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளில் இருந்து 1.35 லட்சம் கனஅடி நீர் திறப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதையொட்டி கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை படிப்படியாக நிரம்ப வாய்ப்புள்ளது.  தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது. இதனால் கர்நாடக அணைகளும், மேட்டூர் அணையும் நிரம்பியது. மழை குறைந்ததால் அணையில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 117 அடியானது.

மீண்டும் கனமழை

இந்த நிலையில் கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை கபினி அணைக்கு 42 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கபினி அணையின் நீர் மட்டம் மேலும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 50 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் 1.35 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கூடுதல் நீர் திறப்பு

இந்த நீர் நேற்று இரவு ஒகனேக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பால் தமிழக காவிரி கரையோர மாவட்டங்களான தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது.

சேர்வலாறு அணை...

இதே போல் ஊட்டி மலைப்பகுதியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 35 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.25 அடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்கு வரும் நீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 123.23 அடியாக உயர்ந்துள்ளது.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினாலும், அணைகளில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதாலும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் நேற்று காலை 20.10 அடியாக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து