தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      இந்தியா
Meteorological Center Delhi

Source: provided

புது டெல்லி : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில்...

தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

கனமழை ...

இந்நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரபிக்கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதே போல் உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து