நேரு - ஜின்னா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் தலாய்லாமா

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      இந்தியா
Dalai Lama(N)

Source: provided

புது டெல்லி : நேரு-ஜின்னா விவகாரம் தொடர்பாக தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தலாய் லாமா கூறியுள்ளார். 

திபெத்திய புத்த மதத் துறவி தலாய் லாமா கோவாவின் சங்காலிம்மில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது ஜவஹர்லால் நேரு சுயநலத்துடன் இந்தியப் பிரதமர் பதவியை தானே வகிக்க நினைத்தார் என்றும் அவர் அந்தப் பதவியை முகமது அலி ஜின்னாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் மகாத்மா காந்தி நினைத்தபடி இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நடந்திருக்காது என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தலாய் லாமா கூறியதாவது, எனது கருத்து சர்ச்சைக்குரியதாகிவிட்டது. நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து