மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான உதவிகள் வழங்க மத்திய அரசு தயார்: ராஜ்நாத்சிங்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      இந்தியா
Rajnathsingh

கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கினர். இவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் மலப்புரம், கோழிக்கோடு வயநாடு, இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 24 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நிலச்சரிவால் பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி  26 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  இந்தநிலையில் இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முழு ஒத்துழைப்பு

கேரளாவில் வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் பற்றி  கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் கேட்டறிந்தேன். ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உதவிகள் தேவைப்பட்டால் அவர் என்னிடம் தொடர்பு கொள்வதாக தெரிவித்துள்ளார்.  கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து