முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

2 மடங்கு உயர்வு...

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் ‘டாலர்’ மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது.

துருக்கி எதிர்ப்பு

இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு 2 நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து