முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை மேம்படுத்த மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : இந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என்று மும்பை ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
மும்பை ஐ.ஐ.டி.யின் 56 -வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி  மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

முக்கிய பங்கு...

நாட்டைக் கட்டமைப்பதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  உலக அளவில் இந்திய பிராண்ட் பிரபலமடைய ஐ.ஐ.டி.க்கள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளது.இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐ.ஐ.டி. மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.  புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளி வருகிறது. அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல.

அடிப்படை கட்டமைப்பு...

இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் . புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும். புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுத்துகிறது.  புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பாகும்.  இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.1,000 கோடி நிதி...

இதையடுத்து ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் மும்பை ஐ.ஐ.டி.க்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார். இந்த விழாவில் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து